ஜம்மு காஷ்மீரில், கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் கவிழும் நிலையில் இருந்த பேருந்தை ராணுவ வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினர்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரை சேர்ந்த 40 பயணிகள், அமர்நாத் யாத்திரையை முடித்துக்கொண்டு, சொகுசு பேருந்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பீதியடைந்த பயணிகள் சிலர் ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்தனர். இதில் 3 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஓடையில் கவிழும் நிலையில் இருந்துள்ளது. அப்போது அங்கு சென்ற ராணுவ வீரர்கள்பேருந்து சக்கரத்தின் முன் கற்களை வைத்து அதனை தடுத்து நிறுத்தினர்.