ஹிந்தி நடிகர் ஷாருக்கானுக்கு லோகர்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
சுவிட்சர்லாந்தின் லோகர்னோ நகரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.