அஸ்ஸாமில் பெய்த கனமழை காரணமாக வீடுகளை வெள்ளம் மூழ்கடித்தால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாமின் நாகோன் நகரில் பெய்த கனமழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். வெள்ளம் வடிய இன்னும் சில நாட்களாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பெய்த தொடர் மழை காரணமாக சரயு நதியில் நீர்மட்டம் அதிகரித்ததால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா தளமான ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
டெல்லியில் வெயில் சுட்டெரித்த நிலையில், மோதிபாக் பகுதியில் பரவலாக மழை பெய்தது. கடமைப் பாதையில் இதமான காலநிலை நிலவியதால் அங்கு கூடி பொதுமக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.