தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழாவெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இரண்டாம் நாள் விழாவில் சுவாமி சோமநாதரும், சோமசுந்தரி அம்பாளும் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.