புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுவதாக அம்மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்து புகாரளித்துள்ளனர்.
அந்த மனுவில் முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணி தர்மத்துடன் நடக்கவில்லை எனவும் கூட்டணி எம்எல்ஏக்களுடன் மாநில வளர்ச்சி குறித்து பேசியதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க பாஜக எம்எல்ஏக்களுக்கு விருப்பமில்லை எனவே கூட்டணியை விட்டு வெளியேறலாம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.