திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் பகுதியில் 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இனாம் சமயபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன் மின்மாற்றி வெடித்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களாக கோளாறு சரி செய்யப்படவில்லை என குற்றம்சாட்டிய பொதுமக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.