பீகாரில் உள்ள பாலங்கள் குறித்து உயர்மட்ட கட்டமைப்பு தணிக்கை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாளில் 7 பாலங்கள் இடிந்து விழுந்தன. இதுகுறித்து ஆய்வு நடத்த உயர்நிலைக் குழுவை பீகார் அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் மிக உயர்ந்த அளவிலான கட்டமைப்பு தணிக்கையை மேற்கொண்டு, பலவீனமான கட்டமைப்பை இடிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ, அம்மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.