தூத்துக்குடி மாவட்டம், பாப்பக்குடி அருகே சிறுமியை சந்தித்து பேசிய இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த விக்டர் என்பவர் தனது உறவினர் பெண்ணான 17வயது சிறுமியை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.
இதைக்கண்ட சிறுமியின் குடும்பத்தினர் விக்டரை வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் சகோதரர் தங்கசெல்வன், தந்தை, தாய் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.