சுவாமி விவேகானந்தரின் ஆழ்ந்த ஞானமும், இடைவிடாத அறிவின் நாட்டமும் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விவேகானந்தரின் 122-வது நினைவு தினத்தையொட்டி, எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுவாமி விவேகானந்தரின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், அவரது போதனைகள் கோடிக்கணக்கானோருக்கு பலம் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய ஆழ்ந்த ஞானமும், இடைவிடாத அறிவின் நாட்டமும் மிகவும் ஊக்கமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வளமான மற்றும் முற்போக்கான சமுதாயம் என்ற விவேகானந்தரின் கனவை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் மோடி எடுத்துரைத்தார்.