கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மெத்தனால் பதுக்கி வைத்ததாக கூறப்படும் பெட்ரோல் பங்கிற்கு சிபிசிஐடி போலீசார் சீல் வைத்தனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதேஷ் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீரபெருமாநல்லூர் பகுதியில் இயங்காமல் உள்ள பெட்ரோல் பங்கில் 2 ஆயிரம் லிட்டம் மெத்தனால் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற சிபிசிஐடி அதிகாரிகள் அங்கிருந்த பெட்ரோல் பங்கை தற்காலிகமாக சீல் வைத்தனர்.