நீலகிரி மாவட்டம் கூடலூரில் மதுபோதையில் காய்கறி கடை வியாபாரியிடம் பணம் கேட்டு 3 திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும், வியாபாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகளையும் சாலையில் கொட்டினர்.
அப்போது அதனை தடுக்க முற்பட்ட வியாபாரிகளையும் திருநங்கைகள் ஆபாசமாக திட்டியது காண்போரை முகம் சுழிக்க செய்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.