செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கையை பின்புறம் கட்டிக்கொண்டு 28 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து 5 வயது சிறுவன் சாதனை படைத்தார்.
படூர் ஊராட்சியை சேர்ந்த விஜய்- அருணா தம்பதியின் 5 வயது மகன் ரோஷன் UKG படித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுவன் ரோஷன், கைகளை பின்புறம் கட்டி கொண்டு நீச்சல் குளத்தில் 28 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 59 நொடியில் கடந்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பிடித்தார்.
இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர், சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.