பாலியல் வழக்கில் சிக்கிய கர்நாடக மேலவை உறுப்பினர் சூரஜ் ரேவண்ணாவை வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சூரஜ் ரேவண்ணா தனது மதச்சார்பற்ற ஜனதா தள தொண்டர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதன்பேரில் அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
போலீஸ் காவல் நிறைவடைந்ததை அடுத்து, சூரஜ் ரேவண்ணாவை ஜூலை 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.