அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
காட்டுத் தீ காரணமாக, வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.