டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
டி-20 உலகக்கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் நட்சத்திர விடுதி வரை, வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நட்சத்திர விடுதியை அடைந்த இந்திய வீரர்கள் அங்கு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் சீருடை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த கேக்கை, பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் மற்றும் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் வெட்டினர்.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்த இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பையை அவரிடம் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது வீரர்களுக்கு தேநீர் விருந்தளித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். இதனைத் பிரதமருடன் இந்திய வீரர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.