பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி 330க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, கீர் ஸ்டார்மர் அடுத்த பிரதமராகிறார் .
பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது. எனினும், முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடைபெறுமென பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார். அதன்படி, மொத்தமுள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு இரவு 10 மணி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் பணி உடனடியாகத் தொடங்கிய நிலையில், தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு 326 இடங்கள் தேவையான நிலையில், தொழிலாளர் கட்சி சுமார் 330க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 68 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதனைதொடர்ந்து தொழிலாளர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராகிறார்.
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ரிஷி சுனக், தேர்தல் வெற்றிக்காக கீர் ஸ்டார்மர் அழைத்து தான் வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.