டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் சேலம் அணியை வீழ்த்தி மதுரை பந்தர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
சேலத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.