தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவை ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா நேரில் சென்று ஆய்வு நடத்தியிருந்தார். இதுகுறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஆட்சேபத்துக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்தார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல் துறை ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு, ரேகா சர்மா புகார் அனுப்பினார். இதன்பேரில் மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.