நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதைக் காட்டிலும் வாழ்வதே மேலானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாணவர் விடுதியைத் திறந்துவைத்த அவர், குஜராத்தின் வளர்ச்சிக்கு கட்வா படிதார் சமூகத்தினர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார்.
மேலும் மாணவர்கள் படித்து முடித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல்வேறு உயர் பதவிகளை அடைந்தாலும், நாட்டுக்காக சேவையாற்றுவது முக்கியம் என அவர் தெரிவித்தார். முன்னதாக நவீன பன்னோக்கு மருத்துவமனை ஒன்றை அமித் ஷா திறந்துவைத்தார்.