திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து வரும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
விக்கிரமசிங்கபுரத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக, 50 அடிக்கு மேல் உயரம் கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, தலை கவசம் மற்றும் உடலில் மாட்டக் கூடிய பெல்ட் உள்ளிட்டவைகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதிகள் செய்துதர அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.