புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஹஜ் பெருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மேல்மங்களம் கிராமத்தில் நடைபெற்ற போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.
தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கினை விரைவாக கடந்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி, மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.