தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வார விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறப்பு பரிகார ஸ்தலமாக உள்ளது.
இந்நிலையில் வார விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.