சென்னையில் தங்கம் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.
ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 800 ரூயாபாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனையாகிறது. இதற்கு மாறாக வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன் படி ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.