தேனி கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடத்தின் பில்லர் திடீரென இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ பிரிவிற்கு தனியாக 5 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டவும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஒரு வருடமாக கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மதுரையை சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கட்டிடத்தின் நுழைவாயிலில் பால்கனிக்கு மேலே உள்ள பில்லர் இடிந்து விழுந்து, நம்பிராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் படுகாயமடைந்த செல்வம் மற்றும் முனீஸ் என்ற சதீஷ்குமார் ஆகியோர் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கம்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.