விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் ஜனநாயகத்தையும், சமூகநீதியையும் நிலைநிறுத்த விக்கிரவாண்டி மக்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பொதுவாக இடைத்தேர்தல்கள் ஒரு மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியை எடை போடும் தேர்தலாக அமையும் என்றும், ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், எடைக்கு எடை பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கும் தேர்தலாக மாறிவிட்டது என்றும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, பல கிராமங்களில் திமுகவினர் வீடு வீடாக சென்று கொடுத்த பரிசுப் பொருட்களை பொதுமக்களே கொண்டு வந்து திமுக அலுவலகங்களில் வீசி விட்டுச் செல்வது தமிழ்நாட்டில் எந்த இடைத்தேர்தலிலும் நடைபெறாத அதிசயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்பதைவிட, திமுகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? என்பதற்கு ஆயிரம் காரணங்களை தன்னால் பட்டியலிட முடியும் என்று கூறியுள்ள ராமதாஸ்,
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான், கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த அனைத்து தவறுகளையும் திருத்துவதற்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.