தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் புடலங்காய் விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கடம்பக்குடி, சேங்கனூர் பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் புடலங்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் நிலத்தடி நீர் பற்றாக்குறையின் காரணமாக சாகுபடி செய்த புடலங்காய்கள் செடியிலேயே அழுகிவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட புடலங்காய் செடிகளுக்கு அரசு உரிய நிவாரணம் அளித்தால் மட்டுமே அடுத்தமுறை சாகுபடி செய்ய முடியும் எனவும் விவசாயிகள் கூறினர்.