ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இடிபாடுகள் உடனடியாக அகற்றப்பட்டன.
வட இந்தியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஹிமாசல பிரதேசத்தில் கனமழை பெய்துவந்த நிலையில், அதன் தலைநகர் சிம்லாவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக இடிபாடுகள் அகற்றப்பட்டன.