கேரளாவில் கனமழை காரணமாக ஒரு சில வீடுகள் சேதமடைந்துள்ளன. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அயிட்டரா கிராமத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
மரங்கள் வேரோடு சாய்ந்து வீட்டின் மேற்கூரையில் விழுந்ததால், ஒரு சில வீடுகளின் ஓடுகள் கீழே விழுந்தன. இதில், வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.