இந்தியா- ரஷ்யா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் புதின் விடுத்த அழைப்பின்பேரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி மாஸ்கோ சென்றுள்ளார்.
அவரை விமான நிலையத்தில் ரஷ்யாவின் முதல் துணை பிரதமரான டெனிஸ் மாண்டுரோவ் வரவேற்றார்.
பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
அங்கிருந்து மாஸ்கோவில் உள்ள ஹோட்டலுக்கு பிரதமர் மோடி சென்றார். வழக்கத்துக்கு மாறாக ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாண்டுரோவும் பிரதமர் மோடியுடன் ஒரே காரில் அவரை ஹோட்டல் வரை அழைத்து வந்தார்.