ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆடல் பாடலுடன் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
2 நாள் பயணமாக மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடி, விமான நிலையத்திலிருந்து தான் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்றார்.
அப்போது வழிநெடுகிலும் இந்திய வம்சாவளியினரும், ரஷ்ய மக்களும் கூடி, மேளதாளம் முழங்க நடனமாடியும், பாடல் பாடியும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், ரஷ்ய பெண்கள் ஹிந்தி பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. பிரதமர் மோடி தங்கியுள்ள ஹோட்டல் வாசலில், ரஷ்ய அதிபர் புதினுடன் அவர் இருக்கும் பதாகை அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.