விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது.