மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அளித்த ஜாமினை எதிர்த்த அமலாக்கத் துறையின் மனு மீதான விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜூன் 20-ஆம் தேதி ஜாமின் வழங்கியது.
இதனை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.