இந்தியாவின் முதன்மை சரக்கு ரயில் நிறுவனமான Titagarh Rail Systems உலகம் முழுவதும் Make in India தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. china plus one எனப்படும் சீனாவின் பயணியர் இரயில் பெட்டிகள் தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Titagarh Rail Systems இந்தியாவின் முன்னணி தனியார் இரயில் உற்பத்தி நிறுவனமாகும். சரக்கு ரயில்கள் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் இந்நிறுவனம், (semi high speed trains) மித அதிவேக ரயில்கள், மெட்ரோ இரயில்களையும் உற்பத்தி செய்து வருகிறது.
சரக்கு இரயில்களுடன், பயணியர் ரயில்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்துவரும், இந்நிறுவனம், இரயில்கள் ஏற்றுமதி சந்தையிலும் முன்னணி வகிக்கிறது.
புனே மெட்ரோவுக்கான 102 மெட்ரோ ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் விநியோகத்தை இந்நிறுவனமே கவனித்துக் கொண்டது. 24,177 சரக்கு இரயில்கள் தயாரிப்பு பணிகளையும், வந்தே பாரத் இரயில்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பையும் இந்நிறுவனம் கவனித்து கொள்கிறது.
இந்திய அரசின் ஆத்ம நிர்பார் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் மற்றும் ரயில் சக்கரங்கள் என நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்புக்கு குறிப்பிடத்தக்க வகையில் இந்நிறுவனம் உதவுகிறது.
ரயில்வே துறைக்கு அப்பால் கப்பல் கட்டுதல், பாலங்கள் கட்டுதல் மற்றும் இராணுவத் தளவாடங்கள் ஆகியவற்றிலும் Titagarh Rail Systems தயாரிப்பு,பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
Titagarh Rail Systems துணை நிர்வாக இயக்குநர் பிரிதிஷ் சௌத்ரி, ரயில் ஏற்றுமதிச் சந்தையில் மிக அதிக வளர்ச்சியும் வாய்ப்பும் உருவாகி உள்ளதாகவும், குறிப்பாக பயணியர் ரயில் உற்பத்தியில் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உலக அளவில் சீன பொருட்களின் தரம் பற்றிய ஐயம் எழுந்துள்ள நிலையில், சீனாவின் இரயில் நிறுவனமான சீனா பிளஸ் ஒன் நிறுவனத்தின் மீதும் அதே ஐயம் எழுந்துள்ளது. எனவே சீனாவிலிருந்து பொருட்கள் வாங்குவதில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த சூழலில், ரயில் உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி சந்தையில் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி சந்தையில் அதிக கவனம் செலுத்தி வருவதாக Titagarh Rail Systems துணை நிர்வாக இயக்குநர் பிரிதிஷ் சௌத்ரி, தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில், சீனாவின் மெட்ரோ இரயில்களின் புதிய வடிவமான china plus one என்னும் பயணியர் ரயில்களை தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை Titagarh Rail Systems பெற்றுள்ளது.
ஏற்கெனவே, இத்தாலிய பயணியர் மற்றும் இத்தாலி மெட்ரோ இரயில்கள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஐரோப்பாவில் முன்னிலையில் உள்ளது. முதலில் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து ரயிலை உருவாக்கிய நிலையில், இப்போது முழுவதும் , இந்தியாவிலேயே ரயில் பெட்டிகளை தயாரித்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்பதன் வெற்றியாக இது பார்க்கப் படுகிறது.
2028 நிதியாண்டில் ஆண்டுக்கு 850 பெட்டிகளாக தனது உற்பத்தித் திறனை விரிவுபடுத்த திட்டமிடப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான 700 கோடி ரூபாயை முதலீடாக அறிவித்துள்ளது இந்நிறுவனம். சரக்கு ரயில்கள் சந்தையில் 30% பங்குடன் Titagarh Rail Systems முன்னணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும், மெட்ரோ இரயிலுக்கான துருப்பிடிக்காத எஃகு பெட்டிகளைத் தயாரிக்க சீன ரயில்வேயுடன் Titagarh Rail Systems இணைந்துள்ளது. இதனால், மாதத்துக்கு 72 பெட்டிகள் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக மாறி உள்ளது.