டி20 உலகக்கோப்பை தொடரின் தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்த தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியின் தேர்வு குழுவில் இடம் பெற்று இருந்த முன்னாள் வீரர்கள் வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக் ஆகியோரை அதிரடியாக நீக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.