உத்தரபிரதேசத்தில் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்.
ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, இமயமலை பகுதியில் பெய்த மழையால் கங்கையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பீகாரில் பாட்னா காந்தி படித்துறையை மூழ்கடித்து கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.