தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்று புதைத்த மனைவி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
ஆடுதுறை அருகே வசித்து வந்த மாரிமுத்து தனது 2வது மனைவியான பிரியாவை மதுபோதையில் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியா தனது ஆண் நண்பர் மணிகண்டனுடன் சேர்ந்து மாரிமுத்துவை கொலை செய்து சாத்தனூர் அருகே உள்ள செங்கள் சூளையில் புதைத்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில் மாரிமுத்துவின் சடலத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.