டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதுகு வலி காரணமாக ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.