கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நல்லூர் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
நல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத 2 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் கைப்பற்றப்பட்டது.