தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மொ்ச்சண்ட்டின் திருமண விழாவில் பிரதமா் மோடி நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தாா்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவா் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும்-ராதிகா மொ்ச்சண்ட் என்பவருக்கும், மும்பையில் நேற்று முன்தினம் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
அதில் சர்வதேச பிரபலங்கள், விளையாட்டு வீரா்கள், தொழிலதிபா்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனா். இதைத்தொடா்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். புதுமணத் தம்பதி பிரதமர் மோடியிடம் ஆசி பெற்றனர்.