“தமிழகத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நவீன டாஸ்மாக் சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
புதுக்கோட்டையில் இச்சங்கத்தின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அச்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி, வாங்கிய கடனை கட்ட முடியாத பெண்களை நுண் நிதி நிறுவனங்கள் பல்வேறு தொந்தரவுகளை செய்து வருவதாக குற்றச்சாட்டினார்.
இதனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும் சிறப்புப் பிரிவு தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.