விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 26 அமைச்சர்கள், 18 எம்.பிக்கள், 86 எம்.எல்.ஏக்கள், 162 உள்ளாட்சி தலைவர்கள் பெருந்தொகையை செலவு செய்து வெற்றி பெற்றுள்ளதாக, பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “திமுக அரசு மீது வரும் பழிகளை மறைக்கவே காங்கிரஸ் கட்சியினர் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு பேசி போராட்டம் நடத்தி வருகின்றனர்” என விமர்சித்தார்.