திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் லாரி மீது கண்டெய்னர் விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான நாகராஜன், திருச்சி காமராஜர் துறைமுகத்தில் கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது லாரி மீது கண்டெய்னர் தவறி விழுந்ததில் ஓட்டுநர் நாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், நாகராஜனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.