திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து திருப்பத்தூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வாணியம்பாடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 3 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கஞ்சா கடத்ததில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ஜகதீஷ், நவீன், விஷால் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.