தஞ்சாவூரில் காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அணைகளில் போதிய நீர் இல்லை எனக்கூறி தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே கைகளில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து வரும் கர்நாடக அரசு கண்டித்து வருகிற 16-ஆம் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.