செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது.
சென்னை அக்கரைப்பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது குடும்பத்தினரோடு சேலம் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார்.
அரப்பேடு கூட்ரோடு பகுதியில் காரை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட சென்றபோது, கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.