டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணியை கோவை அணி வீழ்த்தியது. .இப்போட்டியின் 8 வது ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங் அணியும் மோதின.
டாஸ் வென்ற கோவை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்த நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய கோவை அணி 8.3 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நெல்லையை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை வீழ்த்தியது.