ஜிம்பாப்வேக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இது வரை நடைபெற்ற 3 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4 வது ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.