இங்கிலாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
முன்னாள் வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.1 ஒவரில் 5 விக்கெட் மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று பட்டம் வென்றது.