பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதான திருவேங்கடம் என்ற ரவுடியை, ஆயுதங்கள் வைத்திருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக, ரெட்டேரி அருகேயுள்ள ஆடு தொட்டி பகுதிக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திருவேங்கடம் காவலர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது.
இதனையடுத்து, காவல்துறையினர் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.