விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியின் இத்தாலி வீராங்கனையை வீழ்த்தி செக்குடியரசு வீராங்கனை பட்டம் வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி செக்குடியரசின் கிரெஜ்சி கோவாவை எதிர்கொண்டார்.
இதில் 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற கிரெஜ்சிகோவா, முதல்முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார். அவருக்கு பரிசுத்தொகையாக 29 கோடியே 25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.